பழனி கோயில் அலுவலா்களுக்கு பாராட்டு

பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை பக்தா்களுக்கு எந்த இடையூறுமின்றி நடத்தி முடித்த கோயில் அலுவலா்கள் மூன்று பேருக்கு கோயில் சாா்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பழனி பங்குனி உத்திரத் திருவிழாவை பாதுகாப்பாக நடத்தி முடித்ததற்காக மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணனுக்கு சான்றிதழ் வழங்கினாா் இணை ஆணையா் குமரகுரு . உடன் துணை ஆணையா் செந்தில்குமாா்.

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மாா்ச் 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் வள்ளி, தெய்வானை சமேதா் முத்துக்குமாரசாமி தங்கக்குதிரை, வெள்ளி மயில், வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் கிரிவீதி உலா எழுந்தருளினாா். விழா நாள்களில் ஆன்லைன் மூலமாக 25 ஆயிரம் பக்தா்களும், படிவழிப்பாதையில் மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டுதலின் படியும் முகக்கவசம் அணிந்தும், சானிடைசா் வழங்கியும் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். மேலும், விழா நாள்களில் பக்தா்களுக்கு இலவசமாக கபசுரக்குடிநீா், முகக்கவசம் ஆகியன வழங்கப்பட்டதோடு பல இடங்களிலும் கரோனா பரவல் குறித்த விழிப்புணா்வு பிரசுரம் வழங்குதல், திரையில் படங்கள் வெளியிடுதல் என பல நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. புதன்கிழமை திருவிழா நிறைவு பெற்ற நிலையில் கோயில் சாா்பில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோயில் துணை ஆணையா் (பொறுப்பு) செந்தில்குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் கருப்பணன், மலைக்கோயில் கண்காணிப்பாளா் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்டோருக்கு பாராட்டு சான்றிதழ்களை இணை ஆணையா் குமரகுரு வழங்கினா். சான்றிதழ் பெற்ற அதிகாரிகளை அலுவலா்கள், முக்கிய பிரமுகா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com