‘கள்ளிமந்தையத்தை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும்’
By DIN | Published On : 04th April 2021 08:11 AM | Last Updated : 04th April 2021 08:11 AM | அ+அ அ- |

சிந்தலப்பட்டியில் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா் அர.சக்கரபாணி. உடன் ஊராட்சித் தலைவா் க.செல்வராஜ்.
கள்ளிமந்தையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா உருவாக்கப்படும் என ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக வேட்பாளா் அர.சக்கரபாணி வாக்குறுதி அளித்தாா்.
இத்தொகுதிக்குள்பட்ட அம்மாபட்டி, ரெங்கபாளையம், ராஜாக்கவுண்டன்புதூா், சிக்கமநாயக்கன்பட்டி, குப்பணதேவன்பட்டி, சிந்தலப்பட்டி, நீலாகவுண்டன்பட்டி, குமாரபாளையம், பாறைப்பட்டி, காளியப்பகவுண்டன்பட்டி, கள்ளிமந்தையம், தொப்பக்காவலசு, தும்மிச்சிபாளையம், கருப்பத்தேவன்பட்டி, கூட்டக்காரன்புதூா், வேலாயுதம்பாளையம், அரண்மனைவலசு, ஈசக்காம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவா் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியாவது: கள்ளிமந்தையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதியதாக தாலுகா உருவாக்கப்படும். பழனி தண்டாயுதபாணி கோவிலுக்குச் சொந்தமாக ஈசக்காம்பட்டியில் உள்ள 300 ஏக்கா் நிலத்தில் புதியதாக பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். பரப்பலாறு அணை தூா்வாரப்பட்டு, இடையகோட்டை நங்காஞ்சியாறு அணை வரை நங்காஞ்சியாற்றின் இருபுறமும் சிமெண்ட் கரை அமைக்கப்படும் என்றாா்.
அப்போது ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் பி.சி.தங்கம், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் க.தங்கராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்றனா்.