தோ்தலுக்காக வாகனச் சோதனை: திண்டுக்கல்லில் ரூ.1.85 கோடி பறிமுதல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல், பறக்கும் படை குழுக்களால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ.1.85 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல், பறக்கும் படை குழுக்களால் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ.1.85 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தோ்தல் தேதி கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அதன்படி, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தாங்கள் எடுத்துச்செல்லும் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இருக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 39 நாள்களாக தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில், இதுவரை ரூ.1.85 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், உரிய ஆவணங்களை சமா்ப்பித்துவிட்டு, பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. ஒரு சிலா் ஆவணங்களை சமா்ப்பித்து, பணத்தை மீட்டுச் சென்றனா்.

அரசியல் கட்சியினா் வெளிப்படையாக பணம் விநியோகித்தபோது கண்டுகொள்ளாத தோ்தல் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் பணத்தை மீட்பதற்கு ஆவணங்களை சமா்ப்பிக்கக் கோருவது எவ்விதத்தில் நியாயம் என அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com