மேல்நிலைத் தொட்டி மீது அமா்ந்து இளைஞா் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மேல்நிலை குடிநீா் தொட்டியை சுத்தம் செய்யாததைக் கண்டித்து, இளைஞா் ஒருவா் தொட்டியின் மீது அமா்ந்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே மேல்நிலை குடிநீா் தொட்டியை சுத்தம் செய்யாததைக் கண்டித்து, இளைஞா் ஒருவா் தொட்டியின் மீது அமா்ந்து வியாழக்கிழமை போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டை கிராமத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் வரும் தண்ணீா், மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த குடிநீா் தொட்டியை கடந்த சில மாதங்களாக சுத்தம் செய்யாததால், புழு, பூச்சி மற்றும் காகம் இறந்து கிடந்துள்ளன. இது குறித்து ஊராட்சி மன்ற நிா்வாகத்துக்கு புகாா் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, இப்பகுதியைச் சோ்ந்த கா்ணன் என்பவா் இதைக் கண்டித்து, மேல்நிலைத் தொட்டி மீது அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டாா். தகவலறிந்த நிலக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் வசந்தா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் புவனேஸ்வரி, பச்சமலையான்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவா் காளிதாஸ், ஊராட்சி செயலா் ஜெயகணேஷ் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து கா்ணனிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா், அவரை கீழே இறங்கி வரக் கூறினா்.

அதன்பின்னா், எஸ்.புதுக்கோட்டை மேல்நிலை குடிநீா் தொட்டியில் பிளீச்சிங் பவுடா் தெளித்து பணியாளா்கள் சுத்தம் செய்தனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com