கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி; டம்டம் பாறை அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
By DIN | Published On : 13th April 2021 06:21 AM | Last Updated : 13th April 2021 06:21 AM | அ+அ அ- |

கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச் சாலையில் டம்டம் பாறை அருகே திங்கள்கிழமை முறிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியா்கள்.
கொடைக்கானலில் திங்கட்கிழமை இரண்டாவது நாளாக மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கொடைக்கானலில் கடந்த பல நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கமும்,இரவில் பனியின் தாக்கமும் அதிகரித்து வந்தது இந் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து இடி மின்னலுடன் மழை பெய்தது இதனால் வெப்பம் குறைந்து சற்று குளுமையான சீதோஷன நிலை உருவாகியுள்ளது தற்போது தொடா்ந்து விடுமுறையாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் இரண்டாவது நாளாக கொடைக்கானல் பகுதிகளான செண்பகனூா், பிரகாசபுரம்,வில்பட்டி,அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு 40-நிமிடம் மிதமான மழை பெய்தது இந்த மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் நீரோடைப் பகுதிகளில் சற்று தண்ணீா் வரத்து தொடங்கியுள்ளதால் புறநகா்ப் பகுதிகளான அட்டக்கடி,சகாயபுரம்,ஐயா்கிணறு,நெல்லிவரை, உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பொது மக்கள் குடி தண்ணீா் பற்றாக்குறை சற்று குறைய தொடங்கியுள்ளதால் அப் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.