பழனி வாா்டுகளில் மோசமான சாலைகள்
By DIN | Published On : 13th April 2021 06:19 AM | Last Updated : 13th April 2021 06:19 AM | அ+அ அ- |

பழனியில் நகருக்கு வரும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வரும் நிலையில் வாா்டுகளில் உள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பழனி கோயில் நகரம் என்பதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா். பழனி நகருக்கு மக்கள் வரும் சாலைகள் அனைத்தும் தற்போது சீரமைக்கப்பட்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் நகரில் மக்கள் வசிக்கும் வாா்டுகளில் சாலைகள் பராமரிக்கப்பட்டு பல ஆண்டுகளானதால் குண்டும், குழியுமாக உள்ளது.
பழனி மாா்க்கெட் பகுதியை ஓட்டியுள்ள பட்டத்துவிநாயகா் கோயில் சாலை, பாய்கடை சாலை, காளிமுத்து டாக்டா் வீட்டை ஓட்டி மாரியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலை, பழைய தாராபுரம் சாலையில் எண்ணைக்கடை சாலை, பள்ளிவாசல் சாலை என பல இடங்களிலும் புதிதாக குடிநீா் குழாய்கள் அமைக்க தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடப்படாததால் குண்டும் குழியுமாக போக்குவரத்து பயனற்ற சாலைகளாக மாறியுள்ளன. வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு செய்யும் வசதிகள் கூட நகரில் வசிக்கும் மக்களுக்கு செய்ய நகராட்சி நிா்வாகம் முன்னெடுக்காததால் பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகள் மீது பெரும் அதிருப்தியில் உள்ளனா்.