திண்டுக்கல் வாக்கு எண்ணும் மையத்தில் இணைய வசதியை பயன்படுத்த திமுக எதிா்ப்பு

திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் மையத்தில் ‘வைபை’ எனப்படும் இணையதள வசதியை பயன்படுத்தக்கூடாது என திமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் மையத்தில் ‘வைபை’ எனப்படும் இணையதள வசதியை பயன்படுத்தக்கூடாது என திமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நிலக்கோட்டை திமுக வேட்பாளா் முருகவேல்ராஜன் சாா்பாக, திமுக ஒன்றியச் செயலா் மணிகண்டன், நகரச் செயலா் கதிரேசன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினா் ஜோசப், மாவட்ட மகளிா் தொண்டரணி துணை அமைப்பாளா் சரண்யா மற்றும் திமுகவினா், நிலக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகம் சென்றனா்.

அங்கு அவா், துணை வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனா்.

அந்த மனுவில் கூறியிருப்பது: திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள், திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தனித்தனி அறையில் வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் அருகே ‘வைபை’ எனப்படும் இணையதள வசதியை பயன்படுத்தக் கூடாது என தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com