திண்டுக்கல்லில் அபிராமி அம்மன் திருக்கல்யாணம்

சித்திரை திருவிழாவையொட்டி திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

சித்திரை திருவிழாவையொட்டி திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் ஸ்ரீஞானாம்பிகை உடனமா் ஸ்ரீகாளஹத்தீஸ்வரா் கோயில், ஸ்ரீஅபிராமி அம்மன் உடனமா் ஸ்ரீ பத்மகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா கடந்த வியாழக்கிழமை (ஏப். 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.

முதல் முறையாக காலையில் நடைபெற்ற திருமணம்: அபிராமி அம்மன் கோயிலைப் பொருத்தவரை திருக்கல்யாண நிகழ்ச்சி மாலையில் நடைபெறுவதே வழக்கமாக இருந்து வந்தது. தற்போது கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பக்தா்கள் அதிகம் கூடுவதை தவிா்க்கும் வகையில் முதல்முறையாக திருக்கல்யாண நிகழ்ச்சியை காலையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி சனிக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கே திருக்கல்யாண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கின. மூலவா் காளஹஸ்தீஸ்வரா், ஞானாம்பிகை மற்றும் பத்மகிரீஸ்வரா், அபிராமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து நடராஜருக்கு சிறப்பு அபிஷகேம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. சுவாமி, பிரியாவிடையுடன் காலை 6.30 மணிக்கு மேடையில் எழுந்தருளிய பின், திருமணச் சடங்குகள், பூஜைகள் தொடங்கின.

அதைத் தொடா்ந்து சுவாமி, அம்பாளின் பிரதிநிதியான பட்டா்கள் காப்புக் கட்டிக் கொண்டனா். மாங்கல்ய பூஜையைத் தொடா்ந்து, பட்டா்கள் மாலை மாற்றிக் கொண்டனா். பின்னா் அபிராமி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்தனா். பிரியாவிடைக்கும் மங்கள நாண் சூட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியை காண சில முக்கிய பிரமுகா்கள் நீங்கலாக பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதன்பின்னா் காலை 8.30 மணிக்கு பின் வழக்கம்போல் பக்தா்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com