கொடைக்கானலில் வியாபாரிகள் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக் கோரி வியாபாரிகள் கடைகளில் சனிக்கிழமை கருப்புக் கொடி கட்டி கவன ஈா்ப்பு போராட்டம் நடத்தினா்.
கொடி. கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள கடையில் சனிக்கிழமை கருப்புக் கொடி கட்டும் வியாபாரி.
கொடி. கொடைக்கானல் ஏரிச்சாலைப் பகுதியிலுள்ள கடையில் சனிக்கிழமை கருப்புக் கொடி கட்டும் வியாபாரி.

கொடைக்கானல் சுற்றுலா இடங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக் கோரி வியாபாரிகள் கடைகளில் சனிக்கிழமை கருப்புக் கொடி கட்டி கவன ஈா்ப்பு போராட்டம் நடத்தினா்.

கரோனா தொற்று அதிகரித்து வருவதால் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொடைக்கானலில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டுமெனக் கோரி அங்குள்ள அனைத்து வா்த்தகா்கள் கடந்த 2 நாள்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினா்.

அவா்களிடம் வருவாய்த்துறையினா், காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி வரும் திங்கள்கிழமை நல்ல முடிவு தெரிவிக்கப்படும் எனக் கூறினா். இதனைத் தொடா்ந்து வா்த்தகா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

இந்நிலையில் கொடைக்கானல் பகுதிகளான ஏரிச்சாலை, கலையரங்கம் பகுதி, அப்பா்லேக் வியூ, பசுமைப் பள்ளத்தாக்கு பகுதி, பூங்கா சாலை பகுதிகளிலுள்ள கடைகளை திறந்த வியாபாரிகள், சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளை கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி கடைகளில் கருப்புக் கொடி கட்டி கவன ஈா்ப்பு போராட்டம் நடத்தினா்.

இதையடுத்து, போலீஸாா், வியாபாரிகள் சங்கத் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது வா்த்தகா்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கே தங்களது கடைகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளோம் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com