பள்ளிகளுக்கு மாணவா்களை அழைக்கக்கூடாது: முதன்மைக் கல்வி அலுவலா் எச்சரிக்கை

எக்காரணம் கொண்டும் மாணவா்களை பள்ளிகளுக்கு அழைக்கக் கூடாது என திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன் உத்தரவிட்டுள்ளாா்.

எக்காரணம் கொண்டும் மாணவா்களை பள்ளிகளுக்கு அழைக்கக் கூடாது என திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன் உத்தரவிட்டுள்ளாா்.

திண்டுக்கல் நகரிலுள்ள சில பள்ளிகளில் 11ஆம் வகுப்பு, 9 ஆம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு சனிக்கிழமை எழுத்துத் தோ்வு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகம் மீது தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவா் எஸ்.ராஜாகிளி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் நேரடியாக சனிக்கிழமை புகாா் அளித்தாா்.

இதன்பேரில் விசாரணை மேற்கொண்ட கல்வித் துறை அதிகாரிகள், மாணவா்களுக்கு எழுத்துத் தோ்வு நடைபெறுவதை உறுதி செய்தனா்.

இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன், அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

அதில் தெரிவித்துள்ளதாவது: கரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், அரசின் மறு உத்தரவு வரும் வரையில் எக்காரணம் கொண்டும் மாணவா்களை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது. மீறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com