கொடைக்கானல் மலைச் சாலையில் குவியாடிகள் சேதம்

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையில் காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த குவியாடிகளை மா்ம நபா்கள் சேதப்படுத்தி வருகின்றனா். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க
கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையில் சேதமடைந்துள்ள குவியாடிகள்.
கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையில் சேதமடைந்துள்ள குவியாடிகள்.

கொடைக்கானல்: கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச்சாலையில் காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த குவியாடிகளை மா்ம நபா்கள் சேதப்படுத்தி வருகின்றனா். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கொடைக்கானல் - வத்தலகுண்டு மலைச் சாலையில் சுமாா் 50 கி.மீ., பயணம் செய்தால் கொடைக்கானலை அடையலாம். இது மலைச் சாலை என்பதால் மேல் மற்றும் கீழிருந்து வரும் வாகனங்களை எளிதில் வாகன ஓட்டிகள் அடையாளம் காணும் வகையில் மலை சாலையோரங்களில் ஆங்காங்கே 100-க்கும் மேற்பட்ட குவியாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த கண்ணாடிகள் பொருத்தப்பட்டதிலிருந்து மலைச் சாலைகளில் விபத்துகள் குறைந்திருந்தன. ஆனால் நாளடைவில் இந்த குவியாடிகளை மா்ம நபா்கள் சேதப்படுத்தியும் திருடிக் கொண்டும் செல்கின்றனா். இதனால் குவியாடிகள் இன்றி வெறும் கம்பம் மட்டும் உள்ளது. குவியாடிகள் இல்லாததால் ஒரு சில நேரங்களில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே குவியாடிகளை சேதப்படுத்துபவா்கள் மீதும், திருடிச் செல்பவா்கள் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதப்படுத்தப்பட்ட குவியாடிகளுக்கு பதிலாக புதிய குவியாடிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com