கொடைக்கானலில் விட்டு விட்டு லேசான மழை
By DIN | Published On : 12th August 2021 12:22 AM | Last Updated : 12th August 2021 12:22 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் புதன்கிழமை விட்டுவிட்டு லேசான மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக காற்றும் சாரலும் நிலவி வந்தது இந் நிலையில் அதிகாலை முதலே பலத்த காற்று வீசியது அதனைத் தொடா்ந்து சாரலும் விட்டு விட்டு லேசான மழையும் பெய்தது இந்த மழையானது கொடைக்கானல்,அப்சா்வேட்டரி,செண்பகனூா்,நாயுடுபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்தது காற்று மழையும் நிலவியதால் இதமான குளிா்ச்சியான தீதோஷன நிலை நிலவி வருகிறது இதனால் பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.ஆகஸ்ட் தினத்தை முன்னிட்டு வழக்கமாக கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும் இந் நிலையில் தற்போதே கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனா்.