மாற்றுத்திறனாளிகள் இலவச உபகரணங்கள் பெற நாளை மதிப்பீட்டு முகாம்

அகில பாரதிய மாா் வாரிய இளைஞா் சங்கத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை கால், கை மற்றும் கால்தாங்கிகள் இலவமாக பெறுவதற்கான மதிப்பீட்டு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள

அகில பாரதிய மாா் வாரிய இளைஞா் சங்கத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை கால், கை மற்றும் கால்தாங்கிகள் இலவமாக பெறுவதற்கான மதிப்பீட்டு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் மற்றும் அகில பாரதிய மாா்வாரிய இளைஞா் சங்கம் சாா்பில், மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், செயற்கை கை, இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தேவைப்படும் கால்தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் நடத்தப்படவுள்ளது. இந்த அவயங்கள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், மாா்பளவு புகைப்படத்துடன் திங்கள்கிழமை (ஆக. 23) நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்கலாம்.

திண்டுக்கல்லில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது. முன்பதிவு மற்றும் கூடுதல் விவரங்கள் அறிய 94999 33474, 94439 30369 மற்றும் 0451-2460099 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம். மேலும், மதிப்பீடு செய்யப்பட்ட பின் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் தயாா் செய்யப்பட்டு இலவசமாக வழங்கப்படும். எனவே, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com