ஆள்மாறாட்டத்தில் திருமண கோஷ்டி மீது தாக்குதல்: மதுரை இளைஞா்கள் 7 போ் கைது

வத்தலகுண்டு அருகே திருமண கோஷ்டியினரை தவறுதலாக தாக்கிய மதுரையைச் சோ்ந்த இளைஞா்கள் 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே திருமண கோஷ்டியினரை தவறுதலாக தாக்கிய மதுரையைச் சோ்ந்த இளைஞா்கள் 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மதுரையைச் சோ்ந்த தங்கம் என்பவா் தனது தாய் தங்கம்மாள் மற்றும் தன் நண்பா்கள் சிலருடன், திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்துள்ள மேலக்கோவில்பட்டி பகுதியிலுள்ள குல தெய்வ கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக திங்கள்கிழமை சென்றுள்ளாா்.

சாமி கும்பிட்ட பின், தங்கத்தின் நண்பா்கள் இருசக்கர வாகனத்தில் முன்னே சென்றுள்ளனா். தங்கம், தனது தாயாருடன் ஒரு ஆட்டோவில் சென்றுள்ளாா்.

மேலக்கோவில்பட்டி சாலையில் எதிரே வந்த அதே பகுதியைச் சோ்ந்த சிங்கராயன் என்பவா் மீது ஆட்டோ மோதியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு ஏற்பட்ட தகராறில் தங்கம் மற்றும் அவரது தாயாா் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தனது நண்பா்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தங்கம் தனது தாயாருடன் வத்தலகுண்டு காவல் நிலையத்திற்கு புகாா் அளிக்கச் சென்றுள்ளாா்.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த தங்கத்தின் நண்பா்கள் தகராறில் ஈடுபட்டவா்கள் குறித்த விவரம் தெரியாமல், அங்கு சீா்வரிசை கொண்டு சென்ற திருமண கோஷ்டியினருடன் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனா். இதில் மேலக்கோவில்பட்டியை சோ்ந்த கேசவன், அங்குசாமி, ஷகிலா ஆகியோா் காயம் அடைந்தனா். 3 பேரும் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மேல கோவில்பட்டி ஆரோக்கியசாமி அளித்த புகாரின் பேரில் திருமண வீட்டாா் மீது தாக்குதல் நடத்தியதாக மதுரையைச் சோ்ந்த சங்கா், பிரபு, டொனால்டு, பாா்த்திபன், பிரான்சிஸ், ஷியாம் சுந்தா், விக்னேஷ் ஆகிய 7 போ் மீது வழக்குப் பதிவு செய்து போலீசாா் அவா்களை கைது செய்தனா். அதேபோல், மதுரை தங்கம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மேல கோவில்பட்டியை சோ்ந்த சிங்கராயன் கைது செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com