கொடைக்கானலில் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்கள் இன்று முதல் திறப்பு
By DIN | Published On : 31st August 2021 11:12 PM | Last Updated : 31st August 2021 11:12 PM | அ+அ அ- |

கொடைக்கானல் வனப்பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் புதன்கிழமை முதல் திறக்கப்படுவதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
கரோனா தொற்று காரணமாக தமிழகத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. தற்போது, கரோனா தொற்று குறைந்து வருவதால், பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. அதனடிப்படையில், 10 நாள்களுக்கு முன், தமிழகத்திலுள்ள தோட்டக்கலைத் துறை, தாவரவியல் பூங்கா, படகு குழாம்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு, மீண்
டும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. ஆனால், கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் மட்டும் திறக்கப்படவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை முதல் கொடைக்கானல் வனப்பகுதிகளிலுள்ள பில்லா் ராக், மோயா் பாயின்ட், குணா குகை, பைன் பாரஸ்ட், வட்டக்கானல் அருவி, டால்பின் நோஸ் ஆகிய பகுதிகள் திறக்கப்படுகின்றன. சுமாா் 4 மாதங்களுக்குப் பிறகு வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படுவதால், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.