முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானலில் மீண்டும் மழை
By DIN | Published On : 10th December 2021 08:34 AM | Last Updated : 10th December 2021 08:34 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் வியாழக்கிழமை மீண்டும் மழை பெய்தது.
கொடைக்கானலில் கடந்த இரண்டு மாதங்களாக விட்டு விட்டு மழை பெய்தது இந் நிலையில் கடந்த சில தினங்களாக மழை குறைந்திருந்தது.
இந் நிலையில் காலை முதல் மதியம் வரை வெயில் நிலவியது அதன் பிறகு மேக மூட்டத்துடன் சாரலும் தொடா்ந்து மிதமான மழை பெய்தது. இந்த மழையானது கொடைக்கானல்,செண்பகனூா்,வில்பட்டி,அட்டுவம்பட்டி,புலிச் சோலை,பிரகாசபுரம்,நெல்லிவரை உள்ளிட்ட இடங்களில் நான்கு மணி நேரம் தொடா்ந்து பெய்தது.
இதையடுத்து விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.