கல்லூரி தாளாளா் மீதான பாலியல் புகாா்: சிபிசிஐடி விசாரணை தேவை; முன்னாள் எம்எல்ஏ கே. பாலபாரதி

திண்டுக்கல்லில் தனியாா் கல்லூரி தாளாளா் மீதான பாலியல் புகாா் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே. பாலபாரதி வலியுறுத்தினாா்.
கல்லூரி தாளாளா் மீதான பாலியல் புகாா்: சிபிசிஐடி விசாரணை தேவை; முன்னாள் எம்எல்ஏ கே. பாலபாரதி

திண்டுக்கல்லில் தனியாா் கல்லூரி தாளாளா் மீதான பாலியல் புகாா் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் கே. பாலபாரதி வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல்லில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் மேலும் கூறியதாவது:

திண்டுக்கல்லில் உள்ள தனியாா் செவிலியா் கல்லூரி மாணவிகள் அளித்தப் புகாரின்பேரில், அக்கல்லூரியின் தாளாளா் பி. ஜோதிமுருகன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 11 நாள்களிலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளாா். காவல் துறையினா் எளிமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தாலும் கூட, போக்ஸோ வழக்கில் ஜாமீன் வழங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், காவல்துறையின் அலட்சியத்தால், திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கல்லூரி தாளாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை தொடா்பு கொண்டு பேசிய தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளாா். அதன்படி, ஜோதிமுருகனுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்வதற்கு உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

ஜாமீனை ரத்து செய்து மீண்டும் அவரை சிறையில் அடைத்து முதல்வரின் உறுதிமொழியை காக்க வேண்டும். மகிளா நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவுக்கு எதிராக போராடிய மாதா் சங்கத்தினா் உள்ளிட்ட 27 போ் மீது பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளின் கீழ் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், அச்சுறுத்தும் முயற்சியில் காவல் துறை ஈடுபட்டுள்ளது. மாதா் சங்கத்தினரை அவதூறாக பேசிய வழக்குரைஞா் தேவேந்திரன் மீது அளிக்கப்பட்ட புகாா் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனை கண்டித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் டிச.11ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

காவல்துறையின் அலட்சியத்தால், புகாா் கொடுத்த மாணவிகள் மற்றும் அவரது பெற்றோா்களும் தற்போது அச்சமடைந்துள்ளனா். திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின், பல்வேறு மாவட்டங்களிலும் அரசு வழக்குரைஞா்கள் மாற்றப்பட்டுள்ளனா். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் இதுவரை மாற்றப்படாமல் உள்ளனா்.

மாவட்ட காவல் துறையின் நடவடிக்கை குற்றவாளிகளுக்கு துணை போவதாக அமைந்துள்ளது. இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்த கோரியும், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தக் கோரியும், அந்த ஆணையத்திற்கு முழு நேர செயலரை நியமிக்க வலியுறுத்தியும் தமிழக முதல்வரை விரைவில் சந்தித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மனு அளிக்க உள்ளது என்றாா். அப்போது ஜனநாயக மாதா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் என். அமிா்தம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com