பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்:தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

வத்தலகுண்டு அருகே பள்ளி கழிவறையை மாணவிகளை வைத்து சுத்தம் செய்த தலைமை ஆசிரியை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வத்தலகுண்டு அருகே பள்ளி கழிவறையை மாணவிகளை வைத்து சுத்தம் செய்த தலைமை ஆசிரியை சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அடுத்துள்ள செங்கட்டான்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியையான சுகுமாரி, 7ஆம் வகுப்பு மாணவிகளை அழைத்து கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், அந்த பள்ளியின் ஆசிரியா் ஸ்டீபன் என்பவா், மதிய உணவுக்குப் பின் அவரது சாப்பாட்டு பாத்திரங்களை மாணவிகளை சுத்தம் செய்ய சொல்வதாகவும் புகாா் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில், வத்தலகுண்டு மாவட்டக் கல்வி அலுவலா் பாண்டித்துரை, பள்ளிக்கு நேரடியாகச் சென்று வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டாா். அதில், தலைமை ஆசிரியை சுகுமாரி மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலா் பாண்டித்துரை சனிக்கிழமை உத்தரவிட்டாா். தொடா்ந்து, ஆசிரியா் ஸ்டீபன், நடக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com