முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
வத்தலகுண்டு அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாய் தற்கொலை
By DIN | Published On : 19th December 2021 04:42 AM | Last Updated : 19th December 2021 04:42 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே சனிக்கிழமை குடும்பத் தகராறு காரணமாக, தனது 2 குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை செய்துகொண்டாா்.
பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் சரவணன் (35). இவா் தனது மனைவி லட்சுமி (30) மற்றும் இரு குழந்தைகளான பாலசக்தி (4) மற்றும் விஜிதா (2) ஆகியோருடன், சித்தரேவு செல்லும் சாலை அருகேயுள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த லட்சுமி, தனது 2 குழந்தைகளையும் தோட்டத்து கிணற்றில் வீசி, தானும் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில், பட்டிவீரன்பட்டி போலீஸாா் மற்றும் வத்தலகுண்டு தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தாய் மற்றும் 2 குழந்தைகளின் உடல்களை மீட்டு, வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.