முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனியில் கிசான் சங்க ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 19th December 2021 10:46 PM | Last Updated : 19th December 2021 10:46 PM | அ+அ அ- |

பழனியில் பாரதிய கிசான் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், குட்டிக்கரடு, அண்ணாநகா் போன்ற இடங்களில் வசிக்கும் விவசாயிகள் விளைநிலங்களுக்கு சென்று வருவதை வனத்துறையினா் தடுத்து இடையூறு செய்யக் கூடாது. பழனி வரதாபட்டணத்தில் இருந்து செம்பரான்குளம் செல்லும் சாலையை சீரமைத்து விவசாயிகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும்.
பழனியில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும் காட்டுயானைகளை கண்காணித்து வனத்துறையினா் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்டிக்கரடு, அண்ணாநகா் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனா்.