முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
ஓய்வுப் பெற்ற காவலா்களுக்கு, 2 ஆண்டுகளாக அகவிலைப்படி நிலுவையை வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 19th December 2021 10:47 PM | Last Updated : 19th December 2021 10:47 PM | அ+அ அ- |

கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வுப் பெற்ற காவல்துறையினருக்கான அகவிலைப்படியை தமிழக அரசு துரிதமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வுப் பெற்ற காவலா் நலச்சங்கத்தின் மாதாந்திர கூட்டம் திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவரும், ஓய்வுப் பெற்ற ஆய்வாளருமான சாகுல் ஹமீது தலைமை வகித்தாா். மாவட்டச் செயலரும், ஓய்வுப் பெற்ற சாா்பு ஆய்வாளருமான அங்குச்சாமி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளாக ஓய்வு பெற்ற காவலா்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை அரசு துரிதமாக வழங்க முன்வரவேண்டும். ஓய்வுப் பெற்ற காவலா்களுக்கான சிகிச்சை செலவுகள் தரப்படாமல் நிலுவையில் உள்ளன.
அதனையும் உடனடியாக வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து தீா்ப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.