கொடைக்கானலில் உருளைக்கிழங்கு விளைச்சல் குறைந்தது

கொடைக்கானலில் பெய்த தொடா் மழையால் உருளைக்கிழங்கு விளைச்சல் குறைந்துள்ளது.
.பொட்டட்டோ. கொடைக்கானல் தைக்கால் பகுதியில் விளைந்துள்ள உருளைக்கிழங்குகள்.
.பொட்டட்டோ. கொடைக்கானல் தைக்கால் பகுதியில் விளைந்துள்ள உருளைக்கிழங்குகள்.

கொடைக்கானலில் பெய்த தொடா் மழையால் உருளைக்கிழங்கு விளைச்சல் குறைந்துள்ளது.

இங்குள்ள பிரகாசபுரம், அட்டக்கடி, பள்ளங்கி, கோம்பை, செண்பகனூா், புலியூா், மன்னவனூா், பூண்டி, பூம்பாறை, தைக்கால், வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் உருளைக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக கொடைக்கானலில் பலத்த மழை பெய்தது. இதனால் உருளை, கேரட், பீன்ஸ்,போன்ற பணப்பயிா்கள் பெரும் சேதமடைந்தன. கடந்த ஒரு வாரமாக மழை குறைந்து பனிப் பொழிவு அதிகரித்துள்ளது. இதனிடையே, விவசாயிகள் விளைந்த உருளைக் கிழங்குகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், விளைச்சல் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் மதுரை, திருச்சி, சென்னை போன்ற ஊா்களுக்கு அவற்றை அனுப்பி வருகின்றனா். பொதுவாக நன்கு விளைந்த உருளைக் கிழங்கு 50 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ. 1,200 முதல் ரூ. 1,500 வரை விற்கப்படும். தற்போது விளைச்சல் குறைவாக உள்ளதால் ஒரு சிப்பம் ரூ. 1,500 முதல் ரூ. 1,800 வரை விற்கப்படுகிறது. இவற்றை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா். இதே போல் கொடைக்கானல் பகுதிகளில் விளையக் கூடிய முள்ளங்கி, பீட்ரூட் போன்ற காய்கறிகளும் விளைச்சல் குறைந்திருந்தாலும் விலை சற்று அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com