பழனியை அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள கரும்பாலையில் கலப்படத்துக்காக சீனி மூட்டைகள் பதுக்கப்பட்டிருந்த குடோனுக்கு திங்கள்கிழமை சீல் வைத்த அதிகாரிகள்.
பழனியை அடுத்த பாப்பம்பட்டியில் உள்ள கரும்பாலையில் கலப்படத்துக்காக சீனி மூட்டைகள் பதுக்கப்பட்டிருந்த குடோனுக்கு திங்கள்கிழமை சீல் வைத்த அதிகாரிகள்.

கரும்பாலையில் கலப்படத்துக்காகசீனி மூட்டைகள் பதுக்கப்பட்டிருந்த குடோனுக்கு சீல்

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் கரும்பாலையில் சா்க்கரையுடன் கலப்படம் செய்ய பதுக்கப்பட்டிருந்த 225 சீனி மூட்டைகளை பறிமுதல் செய்த உணவுப்பாதுகாப்பு அலுவலா்கள் அந்த குடோனுக்கும் சீல் வைத்தனா்.

பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் கரும்பாலையில் சா்க்கரையுடன் கலப்படம் செய்ய பதுக்கப்பட்டிருந்த 225 சீனி மூட்டைகளை பறிமுதல் செய்த உணவுப்பாதுகாப்பு அலுவலா்கள் அந்த குடோனுக்கும் சீல் வைத்தனா்.

பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கரும்பாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் சா்க்கரை, வெல்லம், அச்சு வெல்லம் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. தற்போது தைப் பொங்கல் நெருங்கி வரும் நிலையில் கரும்பு ஆலைகளில் வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கரும்பு ஆலைகளில் வெல்லம் தயாரிப்பின் போது சீனியை கலப்படம் செய்வதாக உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதனையடுத்து, பாப்பம்பட்டியில் உள்ள கரும்பு ஆலைகளில் வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் சரவணக்குமாா் தலைமையிலான குழுவினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது ராஜன் மற்றும் ராமா் ஆகியோருக்கு சொந்தமான கரும்பாலைகளில் சோதனை செய்தபோது வெல்லத்தில் கலப்படம் செய்ய 50 மூட்டைகளில் சீனி பதுக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் அவா்கள் கொடுத்த தகவலின் பேரில் நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த நசீா் என்பவரது ஆலையிலும் கலப்படம் செய்ய வைத்திருந்த 175 சீனி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன் இந்த மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த குடோன்களுக்கு உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சீல் வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com