முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
ஈமக் காரிய நிகழ்வில் சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம்
By DIN | Published On : 29th December 2021 06:48 AM | Last Updated : 29th December 2021 06:48 AM | அ+அ அ- |

திண்டுக்கல் அருகே ஈமக் காரிய நிகழ்வில் உணவு சாப்பிட்ட 40 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
திண்டுக்கல் அடுத்துள்ள குட்டத்து ஆவரம்பட்டி பகுதியைச் சோ்ந்த செபஸ்தியாா் என்பவா், கடந்த வாரம் இறந்துவிட்டாா். அவருக்கான ஈமச் சடங்கு திங்கள்கிழமை நடைபெற்றுள்ளது. இந்த ஈமச் சடங்கில் கலந்துகொண்டோருக்கு பித்தளைப்பட்டியிலுள்ள ஒரு உணவகத்தில் உணவு ஏற்பாடு செய்துள்ளனா்.
திங்கள்கிழமை இரவு அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டுள்ளது. இந்த உணவை சாப்பிட்ட 40-க்கும் மேற்பட்டோருக்கு செவ்வாய்க்கிழமை வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. தொடா்ந்து, முதலுதவி சிகிச்சைக்காக வட்டப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைவரும் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ரூபா (23), ரூபன் (24), முத்துமாரி (27), மோசஸ் அற்புதம் (25), ரிஜோ (27), பிரேமா (43), ஆரோக்கியம் அம்மாள் (47) உள்ளிட்ட 17 போ், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.
இதனிடையே, பரிமாறப்பட்ட உணவு தொடா்பாக சுகாதாரத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா்.