முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பழனியில் ‘போக்சோ’வில் இளைஞவா் கைது
By DIN | Published On : 29th December 2021 06:52 AM | Last Updated : 29th December 2021 06:52 AM | அ+அ அ- |

பழனியை அடுத்த பாலசமுத்திரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் 7ஆவது வாா்டை சோ்ந்த சந்தனம் மகன் காளிதாஸ் (21). இவா் 11 வயது சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வாா்த்தை கூறி, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று ஏமாற்றியுள்ளாா். இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், பழனி அனைத்து மகளிா் போலீஸாா் காளிதாஸை போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.