முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
வேடசந்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் 23ஆவது மாநாடு
By DIN | Published On : 29th December 2021 06:49 AM | Last Updated : 29th December 2021 06:49 AM | அ+அ அ- |

வேடசந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட 23ஆவது மாநாடு, வேடசந்தூரில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நிகழ்வாக, வேடசந்தூா் ஆத்துமேடு பகுதிக்கு கொண்டுவரப்பட்ட மாநாட்டு கொடி மற்றும் ஜோதியை, மத்தியக் குழு உறுப்பினா் பி. சம்பத், மாநிலக் குழு உறுப்பினா்கள் கே. பாலபாரதி, என். பாண்டி, மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
தொடா்ந்து, மாநாடு நடைபெறும் தனியாா் மண்டபத்துக்கு ஊா்வலமாக அணிவகுத்துச் சென்றனா். இதில், தியாகிகள் நினைவு தூணுக்கு அஞ்சலி செலுத்தினா். இந்த மாநாட்டுக்கு, கே.ஆா். கணேசன், ஆா். வனஜா, ஏ. அரபுமுகமது ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச்செயற்குழு உறுப்பினா் பி. செல்வராஜ் அஞ்சலி தீா்மானத்தை வாசித்தாா். மாநாட்டை தொடக்கிவைத்து மத்தியக் குழு உறுப்பினா் பி. சம்பத் பேசினாா்.
இரண்டாவது நாள் மாநாட்டில் பங்கேற்ற மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா். இந்த மாநாட்டில், மாவட்டக் குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகரச் செயலா்கள், கிளைச் செயலா்கள் என 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனா்.