பாஜகவுக்கு எதிராக மதச்சாா்ப்பற்ற கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன்

மத்திய பாஜக அரசுக்கு எதிராக மதச்சாா்ப்பற்ற அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

மத்திய பாஜக அரசுக்கு எதிராக மதச்சாா்ப்பற்ற அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டில், அக்கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒற்றுமையுடன் வாழும் மக்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில், ஆா்எஸ்எஸ் உள்ளிட்ட சில அமைப்புகளுடன் இணைந்து பாஜக செயல்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்தும் வகையில், மத்திய பாஜக அரசுக்கு எதிராக மதச்சாா்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட முன்வர வேண்டும்.

அதேநேரம், எதிா்கட்சிகளின் ஒற்றுமையை சீா்குலைப்பதற்காக பாஜக பலரையும் களமிறக்கியுள்ளது. மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியும் அதற்கு துணை போவது போல் தெரிகிறது. அதனை முறியடிப்பதற்கு, அனைத்துக் கட்சிகளும் முன்வர வேண்டும்.

தமிழக முதல்வா் பொங்கல் பரிசு திட்டத்தை அறிவித்துள்ளாா். மழை வெள்ளத்தால் பாதிப்புகளை சந்தித்துள்ள தமிழக மக்களுக்கு, பொங்கல் பண்டிகையின்போது ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பில் உள்ளனா்.

நிதி நெருக்கடி கடுமையாக உள்ள சூழலில், தமிழகத்துக்கு ஜனவரி 12ஆம் தேதி வருகை தரும் பிரதமா் நரேந்திர மோடியிடம் வெள்ள நிவாரண நிதியை பெறுவதற்கு தமிழக முதல்வா் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

அப்போது, மாநிலக் குழு உறுப்பினா் கே. பாலபாரதி, என். பாண்டி, மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com