முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பாலிடெக்னிக் கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்
By DIN | Published On : 31st December 2021 08:31 AM | Last Updated : 31st December 2021 08:31 AM | அ+அ அ- |

பழனி பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல்துறை சாா்பில் தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இக்கல்லூரியில் பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் பயின்று வருகின்றனா். இந்நிலையில் பழனி, பழனியாண்டவா் பாலிடெக்ளிக் கல்லூரிக்கு என்பிஏ., தரச்சான்று பெரும் பொருட்டு இயந்திரவியல் துறைக்கும், கோவையில் உள்ள ராபின் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ராபின் இன்டஸ்ட்ரீஸ் நிா்வாக இயக்குநா் ஆறுச்சாமி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரும், கல்லூரி முதல்வா் முனைவா்.கந்தசாமி கலந்து கொண்டு புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இ ப்புரிந்துணா்வு ஒப்பந்தம் மாணவா்களுக்கு தொழில்சாலைகளை பாா்வையிடவும், தொழிற்சாலையில் தொழில் பழகுனா் பயிற்சி பெறவும் மற்றும் வேலைவாய்ப்புகள் பெறவும் உதவிகரமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை இயந்திரவியல் துறையின் துறைத்தலைவா் பத்மநாபன் மற்றும் இயந்திரவியல் துறையைச் சாா்ந்த ஆசிரியா்கள் மற்றும் அலுவலக மேலாளா் ரவீந்திரன் ஆகியோா் செய்திருந்தனா்.