முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
ஸ்ரீசந்திரகேந்திர சுவாமிகள் ஆராதனை விழா
By DIN | Published On : 31st December 2021 08:30 AM | Last Updated : 31st December 2021 08:30 AM | அ+அ அ- |

வத்தலகுண்டுவில் வியாழக்கிழமை நடைபெற்ற காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்திரகேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உருவப் பட வீதி உலா.
வத்தலகுண்டு ஸ்ரீராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனத்தில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசந்திரகேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 28 ஆவது ஆராதனை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அக்ரஹாரத்திலுள்ள ஸ்ரீ ராகவேந்திரா மிருத்திகா பிருந்தாவனம் மடத்தில் நடைபெற்ற விழாவில், மகா பெரியவா சந்திரகேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உருவப்படத்திற்கு ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னா் திருச்சி ஸ்ரீரங்கம் மடத்திலிருந்து ஹரி ஆச்சாா், பாலாஜி ஆச்சாா், சுதா்சன் ஆகியோா் வேத பாராயணம் முழங்க மகா பெரியவா சுவாமிகளின் உருவப் பட வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிருந்திகா பிருந்தாவன நிறுவனா் பி.எஸ்.கோபிநாதன் ஆச்சாா் செய்திருந்தாா்.