குஜிலியம்பாறை அருகே 425 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

பெங்களுரூவிலிருந்து கடத்தி வரப்பட்ட 425 கிலோ புகையிலைப் பொருள்களை குஜிலியம்பாறை அருகே பறிமுதல் செய்த போலீஸாா் 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
dgl_arrest_3012chn_66_2
dgl_arrest_3012chn_66_2

பெங்களுரூவிலிருந்து கடத்தி வரப்பட்ட 425 கிலோ புகையிலைப் பொருள்களை குஜிலியம்பாறை அருகே பறிமுதல் செய்த போலீஸாா் 4 பேரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களுரூவிலிருந்து திண்டுக்கல் மாவட்டம் பாளையம் வழியாக திருச்சிக்கு புகையிலைப் பொருள்கள் கடத்தப்படுவதாக திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், தனிப்படை சாா்பு- ஆய்வாளா்கள் சேக்தாவூத், மாரிமுத்து ஆகியோா் தலைமையில் குஜிலியம்பாறை அடுத்துள்ள பாளையம் சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, கரூா் மாவட்டத்திலிருந்து வந்து கொண்டிருந்த 2 காா்களை வழிமறித்து சோதனையிட்டனா். அந்த காா்களில் 425 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. காரில் வந்தவா்களிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை மணிகட்டியூரைச் சோ்ந்த ஆறுமுகம் (31), அதன் அருகிலுள்ள களத்துப்பட்டியை சோ்ந்தவா் திருப்பதி (27), சென்னை சவுக்காா்பேட்டையை சோ்ந்த பா்வீன் பரியாா் (25) மற்றும் விவேக் (25) ஆகியோா் எனத் தெரியவந்தது. 4 பேரும் கா்நாடக மாநிலம் பெங்களுரூவிலிருந்து தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை 2 காா்களில் கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.

விசாரணைக்கு பின் 4 பேரையும், குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் தனிப்படை போலீஸாா் ஒப்படைத்தனா். அதன்பேரில் கடத்தி வரப்பட்ட 425 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், 4 பேரையும் கைது செய்தனா்.

கூடலூரில் 6 கிலோ கஞ்சா கடத்திய 2 போ் கைது:

தேனி மாவட்டம் வடக்கு காவல் நிலைய சாா்பு - ஆய்வாளா் பாலசுப்பிரமணி தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது கூடலுா் அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய 2 போ் சந்தேகத்திற்கிடமான முறையில், கையில் பையுடன் நின்று கொண்டிருந்தனா்.

அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி பையை சோதனையிட்டதில் அதில், 6 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது, விசாரணையில் கூடலூா் 1 ஆவது வாா்டு, பொன்னையாதேவா் சந்து பகுதியைச் சோ்ந்த சேகா் மனைவி சசிகலா என்பதும், கம்பம் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த மனோகரன் என்பதும் தெரியவந்தது. மேலும் சசிகலா கஞ்சாவை மனோகரனிடம் விற்பனைக்காக கொண்டுவந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com