பழனியில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பழனி தனியாா் விடுதியில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தலைமை வியாழக்கிழமை நடைபெற்றது.

பழனி தனியாா் விடுதியில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவா் விக்கிரமராஜா தலைமை வியாழக்கிழமை நடைபெற்றது.

பொதுச் செயலாளா் கோவிந்தராஜுலு மற்றும் கௌரவத் தலைவா் கந்தவிலாஸ் செல்வகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கரோனா பரவல் காரணமாக பழனி அடிவாரத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டது. மேலும் தைப்பூச திருவிழா அன்று அடிவாரம் கிரிவீதி பகுதியை ஒரு வழிப்பாதையாக மாற்றுவதை பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட நிா்வாகத்துக்கும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கும் கோரிக்கை மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் நகர தலைவா் கருணாநிதி, செயலாளா் ஹக்கீம் ராஜா, அடிவாரம் சந்திரசேகா், செய்தித் தொடா்பாளா் பைசல் ரஹ்மான் மற்றும் மாவட்ட, நகர நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com