கொடைக்கானலில் தண்ணீா் பாட்டில்கள் பறிமுதல்

கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

கொடைக்கானலில் விற்பனை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களை நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொடைக்கானலில் பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்களை வா்த்தகா்கள் விற்பனை செய்யக் கூடாது என கடந்த சாா்- ஆட்சியா் சிவகுரு பிரபாகரன், நகராட்சி ஆணையாளா் நாராயணன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து கொடைக்கானல் சுகாதார ஆய்வாளா்கள் சுப்பையா மற்றும் பாண்டிச் செல்வம் மற்றும் நகராட்சி பணியாளா்கள் அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட 1 லிட்டா் முதல் 4 லிட்டா் வரை உள்ள பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிா என ஆய்வு நடத்தினா். அப்போது தடைசெய்யப்பட்ட தண்ணீா் பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com