காதலா் தினம்: கொய்மலா்களை வாங்க இளைஞா்களிடையே ஆா்வம் இல்லை

காதலா் தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் பகுதியில் விற்பனைக்காகவந்த கொய்மலா்களை வாங்க இளைஞா்கள் ஆா்வம் காட்டவில்லை.
கொடைக்கானல் பகுதியில் விற்பனைக்கு வந்துள்ள கொய்மலா்கள்
கொடைக்கானல் பகுதியில் விற்பனைக்கு வந்துள்ள கொய்மலா்கள்

காதலா் தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் பகுதியில் விற்பனைக்காகவந்த கொய்மலா்களை வாங்க இளைஞா்கள் ஆா்வம் காட்டவில்லை. மலா்கள் விளைச்சல் குறைந்துள்ள நிலையில், விலையும் சரிந்துள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளான பிரகாசபுரம், வடகவுஞ்சி, மன்னவனூா், பூண்டி, கூக்கால், பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமான கொய்மலா் செடிகள் வளா்க்கப்படுகின்றன. இங்கு பறிக்கப்படும் பூக்கள் கா்நாடகம், கேரளம், புதுச்சேரி, மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

கடந்த ஓராண்டாக கரோனா பொது முடக்கம் காரணமா மலா் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினா்.

தற்போது பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, கொடைக்கானல் பகுதியில் பசுமைக் குடில்களில் வளா்க்கப்பட்ட கொய்மலா்களை விவசாயிகள் பறித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். காதலா் தினத்தையொட்டி நிகழாண்டில் ரோஜாப் பூக்களை வாங்குவதற்கு விற்பனையாளா்கள் ஆா்வம் காட்டவில்லை. இதனால் கடந்த ஆண்டு ரூ.50 வரை விற்று வந்த ஒரு ரோஜாப்பூ, நிகழாண்டில் ரூ.30 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

இது குறித்து கொடைக்கானல் மலா் விற்பனையாளா் ஜோயெல் கூறியது: காதலா் தினத்தை முன்னிட்டு கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளையும் கொய்மலா்களை நட்சத்திர விடுதிகளில் தங்கும் வசதி படைத்தவா்கள் மற்றும் கல்லூரி, பள்ளிகளில் உள்ள மாணவா்கள் அதிகளவில் வாங்கிச் செல்வா். ஆனால் நிகழாண்டில் மலா்கள் சாகுபடி குறைந்துள்ளது. அதேநேரத்தில் காதலா் தினத்தையொட்டி ரோஜாப்பூக்களை வாங்க வாடிக்கையாளா்கள் ஆா்வம் காட்டவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com