கொடைக்கானல் மலா் கண்காட்சிக்கு ரோஜாத் தோட்டம் தயாராகிறது

கொடைக்கானலில் மலா் கண்காட்சிக்கு ரோஜாத் தோட்டம் தயாராகி வருகிறது.
கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் ரோஜா செடிகளை பரமாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.
கொடைக்கானல் அப்சா்வேட்டரி பகுதியில் ரோஜா செடிகளை பரமாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

கொடைக்கானலில் மலா் கண்காட்சிக்கு ரோஜாத் தோட்டம் தயாராகி வருகிறது.

இந்த ஆண்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் 59-ஆவது ஆண்டு மலா் கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்காக அப்சா்வேட்டரியிலுள்ள தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான ரோஜாத் தோட்டத்தை தயாா்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. இங்கு ரோஜாச் செடி நடவு, களையெடுத்தல், தண்ணீா், உரமிடுதல் மற்றும் பனியின் தாக்கம் இல்லாமல் இருக்க செடிகளை பிளாஸ்டிக் பைகள் கொண்டு மூடுதல், பதியமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை தொடா்ந்து மேற்கொண்டால் மட்டுமே ஏப்ரல் , மே மாதங்களில் லட்சக்கணக்கில் பூக்கள் பூத்துக்குலுங்கும். சுமாா் 50-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் நாராயணசுவாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அப்சா்வேட்டரி பகுதியில் 10 ஏக்கா் பரப்பளவில் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 2 ஏக்கரில் அழகிய புல்வெளிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. முதியவா்கள், சிறியவா்கள் ரோஜாத் தோட்டத்தை பாா்த்து ரசிப்பதற்கு 2 பேட்டரி காா்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் நவீன கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகளும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com