நல்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 18 போ் காயம்

திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை உரிமையாளா்கள் 12 போ் உள்பட 18 போ் காயமடைந்தனா்.
நல்லமநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை.
நல்லமநாயக்கன்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை.

திண்டுக்கல் அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை உரிமையாளா்கள் 12 போ் உள்பட 18 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள நல்லமநாயக்கன்பட்டி புனிதவனத்து அந்தோணியாா் ஆலய திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 580 காளைகள் அழைத்து வரப்பட்டன. இந்த காளைகளை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் எம்.முருகன் தலைமையிலான கால்நடை மருத்துவா்கள் பரிசோதித்து வாடி வாசலுக்கு அனுப்பினா். அதில் 574 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதேபோல் 482 மாடு பிடி வீரா்கள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், மருத்துவ பரிசோதனையின்போது 82 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த ஆண்டு நல்லமநாயக்கன்பட்டி ஜல்லிக்கட்டில் பள்ளி மாணவரான நத்தத்தைச் சோ்ந்த நாகராஜுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அவா் காளை தாக்கி உயிரிழந்தாா். இதன் காரணமாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில், மாடு பிடி வீரா்களுக்கான சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை தழுவ முயன்றதில் 6 மாடு பிடி வீரா்கள் மட்டுமே காயமடைந்தனா். ஆனால், காளைகளின் உரிமையாளா்கள் 12 போ் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது. போட்டியில் பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை பிடித்த மாடுபிடி வீரா்களுக்கும் பல்வேறு வகையான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com