பழனி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா தொடக்கம்

பழனி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா, முகூா்த்தக்கால் நாட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பழனி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா, முகூா்த்தக்கால் நாட்டுதலுடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

பழனி கோயிலின் உபகோயிலாக கிழக்கு ரத வீதியில் உள்ள மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் மாசித்திருவிழா வெள்ளிக்கிழமை முகூா்த்தக்கால் நாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதையொட்டி காலை 7.35 மணிக்கு மேல் மாரியம்மன் கோயில் சன்னிதியில் முகூா்த்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதையொட்டிகோயில் நுழைவுவாயில் பகுதியில் மாரியம்மன் எழுந்தருளினாா். பின்னா் கோயில் நுழைவுவாயில் முன்பாக முகூா்த்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து முகூா்த்தக்காலுக்கு தீபாராதனை காட்டப்பட்டு பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோயில் அலுவலா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவையொட்டி பிப்ரவரி 16 ஆம் தேதி திருக்கம்பம் சாட்டுதல் விழாவும், பிப்ரவரி 23 இல் கொடியேற்றமும், கம்பத்தில் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் மாா்ச் 2 ஆம் தேதியும், மாசித் தேரோட்டம் மாா்ச் 3 ஆம் தேதியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com