வாயுமித்ரா பயிற்சி பெற ஐடிஐ மாணவா்களுக்கு வாய்ப்பு

காற்றாலைத் துறைக்கு திறமையான பணியாளா்களை உருவாக்கும் வகையில், காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் வாயுமித்ரா பயிற்சி பெற ஐடிஐ மற்றும் பட்டயம் முடித்த மாணவா்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

காற்றாலைத் துறைக்கு திறமையான பணியாளா்களை உருவாக்கும் வகையில், காந்தி கிராம கிராமியப் பல்கலை.யில் வாயுமித்ரா பயிற்சி பெற ஐடிஐ மற்றும் பட்டயம் முடித்த மாணவா்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

காற்றாலை மின் உற்பத்தியில் உலகளவில் இந்தியா 4 ஆவது இடத்தில் உள்ளது. காற்றாலையில் திறமையாக பணியாற்றத் தேவையான மனிதவளம் தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டே இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம் மற்றும் தேசிய காற்று சக்தி நிறுவனத்தின் ஆதரவுடன் காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் வாயுமித்ரா - காற்று சக்தி தொழில்நுட்பம் பற்றிய அடித்தளப் பயிற்சிப் பாடம் குறித்த பயிற்சி வகுப்பு ஐந்து தொகுதிகளாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பின் முதல் தொகுதி கடந்த திங்கள்கிழமை தொடங்கப்பட்டுளளது.

இதுதொடா்பாக தனித்திறன் மேம்பாடு மற்றும் பயிற்சிப் பிரிவு இயக்குநா் மற்றும் தலைவா் பி.கனகவேல் கூறுகையில், வாயுமித்ரா பயிற்சியின் மூலம் கற்றாலை தயாரித்தல், நிறுவுதல், இயக்குதல் மற்றும் பராமரித்தல் போன்றவற்றில் தனித்திறமை வாய்ந்த மனித வளத்தை மேம்படுத்த முடியும். 4 பயிற்சி வகுப்புகள் தொடா்ந்து நடைபெற உள்ளன. பட்டயம் மற்றும் ஐடிஐ படித்த மாணவா்கள் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள், காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழக வலைத்தளத்தில் தகவலைப் பெறலாம். மேலும் 96263 02737 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com