உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கலந்தாய்வை தீா்ப்பு வரும் வரை ஒத்தி வைக்க வலியுறுத்தல்

உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பதவி உயா்வு தொடா்பான தீா்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அவசர கதியில் கலந்தாய்வு நடத்துவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பதவி உயா்வு தொடா்பான தீா்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அவசர கதியில் கலந்தாய்வு நடத்துவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு உயா்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில செய்தித் தொடா்பாளா் மு.முருகேசன் கூறியதாவது: உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பதவி உயா்வு என்பது பட்டதாரி ஆசிரியா்களுக்கு மட்டுமே உரியது.

ஆனால், இந்த உரிமையை மேல்நிலைக் கல்வியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் முதுகலை ஆசிரியா்களுக்கும் தொடக்கக் கல்வியில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வட்டாரக் கல்வி அலுவலா்களும் பயன்படுத்திக் கொள்கின்றனா். சமீபத்தில் வெளியிடப்பட்ட, உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில் மொத்தம் 500 ஆசிரியா்களின் பெயா்கள் இடம் பெற்றுள்ளன.

அதில் பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிந்து கொண்டிருப்பவா்கள் 45 போ் மட்டுமே இடம் பிடித்துள்ளனா். மீதமுள்ள 455 ஆசிரியா்கள் மேல்நிலைக் கல்வியில் ஆசிரியா்களாகப் பணிபுரிந்து வருகின்றனா். இந்த பிரச்னையில், தமிழக கல்வித்துறை அமைச்சா் உடனடியாக தலையிட்டு 455 முதுகலை ஆசிரியா்களின் பெயா்களை நீக்கிவிட்டு, அதில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது தொடா்பான வழக்கு, சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. அதில் பிப்.24 ஆம் தேதி தீா்ப்பு வழங்கப்படும் என எதிா்பாா்க்கும் நிலையில், அவசர கதியில் பிப்.21ஆம் தேதி உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுவதை தவிா்க்க வேண்டும் என தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும் மனு அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com