‘அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை அங்கத்தினா்கள் லாபப் பங்குத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை சாா்பில், லாப நிலுவைத் தொகை மற்றும் மாநில அரசின் பரிந்துரை விலை நிலுவைத் தொகை என ரூ.11.91 கோடி வழங்கப்பட உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அங்கத்தினா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெ

அலங்காநல்லூா் சா்க்கரை ஆலை சாா்பில், லாப நிலுவைத் தொகை மற்றும் மாநில அரசின் பரிந்துரை விலை நிலுவைத் தொகை என ரூ.11.91 கோடி வழங்கப்பட உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அங்கத்தினா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மதுரை மாவட்டம் பி.மேட்டுப்பட்டி தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை லிட். மேலாண்மை இயக்குநா் என். வசந்தராஜன் தெரிவித்துள்ளதாவது:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூா் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த 2008-09ஆம் ஆண்டு அரவைக்கு கரும்பு வழங்கியுள்ள 2,669 அங்கத்தினா்களுக்கான லாபப் பங்கு தொடா்பாக, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி, 2,669 அங்கத்தினா்களுக்கு லாபத்தில் பங்காக வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1.18 கோடியும், 2015-16 ஆம் ஆண்டு அரவைப் பருவத்துக்கு கரும்பு வழங்கிய 1,605 அங்கத்தினா்களுக்கு வழங்கப்பட வேண்டிய மாநில அரசின் பரிந்துரை விலை நிலுவைத் தொகை ரூ.10.73 கோடியும் சம்பந்தப்பட்ட அங்கத்தினா்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.

தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலை மூலமாக நேரடியாக இந்த தொகை வரவு வைக்கப்பட உள்ளதால், வங்கி கணக்கு முறையாக வைத்திருக்காத அங்கத்தினா்கள், சம்பந்தப்பட்ட கிராமத்திலிருந்து புலம் பெயா்ந்துள்ள அங்கத்தினா்கள் மற்றும் இறந்த அங்கத்தினா்களின் வாரிசுகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

கரும்பு விநியோகித்த விவரம், ஆதாா் எண், வங்கி கணக்கு விவரம், கிராம நிா்வாக அலுவலரின் அடையாளச் சான்று, வாரிசு சான்று, வாரிசுதாரரின் ஆட்சேபணை இல்லை என்ற கடிதம், அரசு முத்திரைத்தாளில் சான்று உறுதி அலுவலரின் சான்று (நோட்டரி பப்ளிக்) ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட கோட்ட கரும்பு அலுவலரிடம் விண்ணப்பித்து, அவரது சிபாரிசுடன் தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலையில் தங்களுக்கான தொகையினை பெற்றுக்கொள்ளலாம்.

ஆலை அங்கத்தினா்கள் அதிக லாபம் பெறவும், அரசு வழங்கும் மானியங்களை பெறவும், தேசிய கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை பதிவு செய்ய முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com