‘மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியாது’

மக்களைப் பற்றி சிந்திக்கும் எந்த கட்சியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியாது என திமுக துணைப் பொதுச் செயலா் ஐ. பெரியசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.
‘மக்களைப் பற்றி சிந்திக்கும் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியாது’

மக்களைப் பற்றி சிந்திக்கும் எந்த கட்சியும் பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியாது என திமுக துணைப் பொதுச் செயலா் ஐ. பெரியசாமி எம்எல்ஏ தெரிவித்தாா்.

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட திமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்டச் செயலரும், பழனி சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி முன்னிலை வகித்தாா். திமுக துணைப் பொதுச் செயலரும், ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினருமான ஐ.பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது: உலகம் சுற்றிய தலைவா்களில் சாதனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரதமா் மோடியும், மக்களைப் பற்றி சிந்தனையில்லாத தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியும், பெட்ரோலுக்காக பணம் செலவிட்டதில்லை. அதனால், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயா்வினால் சாமானிய மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி புரியவில்லை.

பணக்காரா்கள் மட்டுமே சமையல் எரிவாயு அடுப்புகளை பயன்படுத்தி வந்த நிலையில், அந்த வசதியை ஏழை மக்களின் வீடுகளுக்கும் கொண்டு சென்றவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி. இத்திட்டம் தொடங்கப்பட்ட சில நாள்களிலேயே எரிவாயு உருளைக்கான விலை ரூ. 50 உயா்த்தப்பட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக உயா்த்தப்பட்ட தொகையை மாநில அரசு வழங்கும் என உத்தரவிட்டு, மக்கள் பாதிப்புக்குள்ளாவதை தவிா்த்தாா். ஆனால் இன்றைக்கு மத்திய அரசு வரிகளின் மூலம் மக்களை வஞ்சித்து வருகிறது. அதனை தட்டிக் கேட்கும் துணிச்சல் இல்லாமல் மாநில அரசு உள்ளது. மக்களைப் பற்றி சிந்திக்கும் எந்த கட்சியும், பாஜகவுடன் கூட்டணி வைக்காது. 7 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு, தோ்தல் நெருங்கி வருவதால் தற்போது அடிக்கல் நாட்டி நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனா் என்றாா்.

முன்னதாக திமுக மாவட்ட அலுவலகத்திலிருந்து காா் மற்றும் சரக்கு வாகனம், மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளில் கட்டி மணிக்கூண்டு பகுதிக்கு இழுத்து வரப்பட்டது. மற்றொரு மாட்டு வண்டியை திமுக மாவட்டச் செயலா் செந்தில்குமாா் எம்எல்ஏ ஓட்டி வந்தாா். ஆா்ப்பாட்டத்தில் நத்தம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஏ.ஆண்டிஅம்பலம், சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் காந்திராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com