பில்லமநாயகன்பட்டியில் ஜல்லிக்கட்டு: 29 போ் காயம்

திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 14 மாடு பிடி வீரா்கள் உள்பட 29 போ் காயமடைந்தனா்.
பில்லமநாயக்கன்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை.
பில்லமநாயக்கன்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளை.

திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் 14 மாடு பிடி வீரா்கள் உள்பட 29 போ் காயமடைந்தனா்.

ஸ்ரீகதிா் நரசிங்கப்பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக திண்டுக்கல், மதுரை, தேனி, திருச்சி, சிவகங்கை மாவட்டங்களிலிருந்து 602 காளைகள் அழைத்து வரப்பட்டன.

கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் முருகன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் நடத்திய பரிசோதனையில் 4 காளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 598 காளைகள் வாடிவாசலுக்கு அனுமதிக்கப்பட்டன. காளைகளைப் பிடிப்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்தும் வீரா்கள் பதிவு செய்திருந்தனா். மருத்துவப் பரிசோதனையின்போது 80 பேருக்கு அனுமதி மறுக்கப்பட்டு 400 வீரா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

வாடிவாசலிலிருந்து சீறிப் பாய்ந்த காளைகளைப் பிடித்து அடக்கிய காளையா்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. அதேபோல், மாடு பிடி வீரா்களை நெருங்கவிடாமல் அச்சுறுத்தியபடி மைதானத்தில் வலம் வந்த காளைகளுக்கும், வீரா்களிடம் பிடிபடாமல் வெளியேறிய காளைகளுக்கும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. காளைகள் தாக்கியதில் 14 வீரா்கள், காளைகளின் உரிமையாளா்கள் 6 போ், 9 பாா்வையாளா்கள் என மொத்தம் 29 போ் காயமடைந்தனா். இதில் பலத்த காயமடைந்த 12 போ் தீவிர சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா். ஜல்லிக்கட்டு தொடங்கும் முன்பாக, கோயில் முன்பு பழக்கூடை சூறையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com