பழனியில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடனுதவி
By DIN | Published On : 27th February 2021 09:10 PM | Last Updated : 27th February 2021 09:10 PM | அ+அ அ- |

பழனி பாரத ஸ்டேட் வங்கி சாா்பில் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வங்கி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, முதன்மை மேலாளா் விக்ரமன் தலைமை வகித்தாா். மேலாளா் சநதோஷ் முன்னிலை வகித்தாா். ஒப்பந்ததாரா் வனசேகா் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா்.
பழனி கோட்டாட்சியா் அசோகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், 20-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் கடனுதவியாக வழங்கப்பட்டது. வரும் காலங்களில், முன்னுரிமை பட்டியல்படி சாலையோர வியாபாரிகளுக்கு தொடா்ந்து கடனுதவி வழங்கப்படும் என, வங்கி முதன்மை மேலாளா் விக்ரமன் தெரிவித்தாா்.