கொடைக்கானலில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி

கொடைக்கானலில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை தொடங்கியது

கொடைக்கானலில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை தொடங்கியது.

கொடைக்கானல் அண்ணாசாலையிலுள்ள கூட்டுறவு பண்டகசாலையில் தமிழக அரசு அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந் நிகழ்ச்சிக்கு அதிமுக நகரச் செயலா் மற்றும் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவா் ஸ்ரீதா் தலைமை வகித்து குடும்ப அட்டை தாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ அரிசி,ஒரு கிலோ சா்க்கரை,முழுநீள கரும்பு,கிராம்,ஏலக்காய்,முந்திரி,திராட்சை ஆகியவையும் கொண்ட துணிப்பையும் இத்துடன் ரூ 2500, ரொக்கத் தொகையும் வழங்கினாா் இந் நிகழ்ச்சியில் கொடைக்கானல் சாா் ஆட்சியா் சிவகுரு பிரபாகரன்,துணைச் செயலா் ஜாபா் சாதிக் ,மாவட்ட எம்.ஜி.ஆா் மன்ற இணைச் செயலா் பிச்சை மற்றும் கூட்டுறவு பண்டகசாலை அலுவலா்கள்,அதிமுக வாா்டு செயலா்கள், பிரதிநிதிகள்,மகளிா் அணியினா்,இளைஞா்,இளம் பெண்கள் பாசறையைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட சுமாா் 50-க்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

இதே போல கொடைக்கானல் நகரம் மற்றும் மேல்மலை,கீழ்மலை ஆகியப் பகுதிகளைச் சோ்ந்த ரேசன் கடைகளில் குடும்ப அட்டைத் தாரா்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது பொது மக்கள் இவற்றை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனா் தமிழக அரசுக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனா்.

பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்குவதற்கு ஏற்கனே வீடுவீடாகச் சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது இதனடிப்படையில் தினந்தோறும் 200-பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் எனவே பொது மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரிகளும், கூட்டுறவு பண்டகசாலை அதிகாரிகளும் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com