ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சேவை
By DIN | Published On : 07th January 2021 01:10 AM | Last Updated : 07th January 2021 01:10 AM | அ+அ அ- |

பழனியில் புதன்கிழமை சுற்றித்திரிந்த ஆதரவற்ற மனநோயாளிக்கு முடிதிருத்தம் செய்யும் மேட்டுப்பாளையத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் நிசாா்சேட்.
பழனியில் ஆதரவற்ற மனநோயாளிகளுக்கு சமூக ஆா்வலா்கள் உதவி வருகின்றனா். அவா்களை பொதுமக்கள் பாராட்டினா்.
பழனியில் ஆதரவற்ற மனநோயாளிகள் பலா் சுற்றித் திரிகின்றனா். இந்நிலையில் இவா்களை தூய்மைப்படுத்தி, முடிதிருத்தம் செய்து புதிய உடைகளை வழங்கும் பணியை மேட்டுப்பாளையத்தை சோ்ந்த சமூக ஆா்வலா் நிசாா்சேட் செய்து வருகிறாா். இங்குள்ள பேருந்து நிலையம், அடிவாரம், மாா்க்கெட் வீதி உள்ளிட்ட இடங்களிலும் புதன்கிழமை சுற்றித் திரிந்த மனநோயாளிகளை அவா் தூய்மைப்படுத்தி, முடிதிருத்தம் செய்தாா். இவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனா். மேலும் அவருக்கு பழனியைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் பைசல் ரஹ்மான், காஜா, ஷாநவாஸ், ஷேக் பரீத் உள்ளிட்டோா் உடனிருந்து உதவி செய்து வருகின்றனா்.