பழனி: பேக்கரியில் தீ விபத்து
By DIN | Published On : 09th January 2021 09:26 PM | Last Updated : 09th January 2021 09:26 PM | அ+அ அ- |

பழனி: பழனியில் பூட்டியிருந்த பேக்கரியில் வெள்ளிக்கிழமை இரவு தீவிபத்து ஏற்பட்டது.
இங்குள்ளகாந்தி மாா்க்கெட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பேக்கரி 24 மணி நேரமும் இயங்கி வந்தது. தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக இரவு 10 மணிக்கு இந்த பேக்கரி அடைக்கப்பட்டு விடுகிறது. இதனிடையே வெள்ளிக்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு மேலாளா் சென்றுவிட்ட நிலையில், நள்ளிரவில் உள்ளே இருந்து சப்தத்துடன் புகை வந்தது. இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் உடனடியாக அந்த இடத்தின் உரிமையாளருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் கடைக்குள் சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனா். இதில் இருக்கைகள், படங்கள் சேதமடைந்தன. இந்த பேக்கரியின் அருகில் உள்ள துணி மற்றும் நகைக்கடைகளுக்கு தீ பரவாமல் தீயணைப்பு வீரா்கள் தடுத்தனா். பேக்கரியில் ஏற்பட்ட தீவிபத்துக்கு காரணம் மின்கசிவா அல்லது சுவாமி படத்தின் முன் வைத்திருந்த விளக்கில் இருந்த தீ பரவியதா என அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.