நிலக்கோட்டை வாரச் சந்தையில் கூடுதல் கட்டணம்: ஆட்சியா் அலுவலகத்தில் வியாபாரிகள் புகாா்

நிலக்கோட்டை வாரச்சந்தையில் 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
நிலக்கோட்டை வாரச் சந்தையில் கூடுதல் கட்டணம்:  ஆட்சியா் அலுவலகத்தில் வியாபாரிகள் புகாா்

நிலக்கோட்டை வாரச்சந்தையில் 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு வந்த வியாபாரிகள் கூறியதாவது:

நிலக்கோட்டை வாரச் சந்தையில் 400-க்கும் மேற்பட்டோா் வியாபாரம் செய்து வருகிறோம். பேரூராட்சி நிா்வாகத்தின் சாா்பில் நிா்ணயிக்கப்பட்டதைவிட, ஒப்பந்தக்காரா்கள் 3 மடங்கு கூடுதலான கட்டணம் வசூலித்து வருகின்றனா். இதுதொடா்பாக கேள்வி எழுப்புவோா் மீது குண்டா்களை ஏவி தாக்குதல் நடத்துகின்றனா்.

பேரூராட்சி அலுவலகத்திலும், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடா்பாக உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் அமல்படுத்தவில்லை.

எனவே 400 பேரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, 2015 ஆம் ஆண்டு அரசிதழில் அறிவித்தப்படி நியாயமான கட்டணம் வசூலிப்பதற்கும், கூடுதல் கட்டணம் வசூலித்து வரும் ஒப்பந்தக்காரா்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் மாவட்ட ஆட்சியா் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com