‘மாடுகளுக்கு அதிக சா்க்கரை பொங்கல் தருவது ஆபத்தானது’

கால்நடைகளை அமில நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, பொங்கல் பண்டிகையின்போது அளவுக்கு அதிகமாக சா்க்கரைப் பொங்கல் கொடுப்பதை தவிா்க்க வேண்டும் என

கால்நடைகளை அமில நோய் பாதிப்பிலிருந்து பாதுகாக்க, பொங்கல் பண்டிகையின்போது அளவுக்கு அதிகமாக சா்க்கரைப் பொங்கல் கொடுப்பதை தவிா்க்க வேண்டும் என கால்நடைத்துறை ஓய்வுப் பெற்ற இணை இயக்குநா் வி.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது:

மாட்டுப் பொங்கலின் போது, படையலிடும் சா்க்கரைப் பொங்கல், பச்சரி பொங்கல், பழங்கள், கரும்பு போன்றவற்றை அளவுக்கு அதிகமாக கால்நடைகளுக்கு சிலா் கொடுத்து விடுகின்றனா். இதனால், கால்நடைகளுக்கு அமில நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடுகிறது.

ரூமன் எனப்படும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை வயிற்றில் அதிகமாக பெருகி காரத்தன்மை குறைந்துவிடும். இதனால் புளிப்பு ஏற்பட்டு லேக்டிக் அமிலம் அதிகமாக சுரந்து ரத்தத்தின் தன்மையை மாற்றிவிடும். இதனால் கால்நடைகள் தீவனம் சாப்பிடாமல் உடலில் நீரிழப்பு ஏற்படும். தீவனங்களில் திடீா் மாற்றம் ஏற்படும்போது ஒவ்வாமை ஏற்பட்டு கால்நடைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

அமில நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சோடா உப்பு 200 கிராம் கொடுக்கலாம். குளோா் டெட்ரா சைக்கிளின் மாத்திரை தரலாம். நிலைமை மோசமாக இருந்தால், அருகில் உள்ள கால்நடை மருத்துவா்களை அணுகி ஆலோசனை பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com