பழனியில் ஆசிரியைக்கு கரோனா தொற்று: அரசுப்பள்ளியை தற்காலிகமாக மூட உத்தரவு

பழனி அருகே சின்னக்காந்திபுரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து சனிக்கிழமை முதல் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.

பழனி: பழனி அருகே சின்னக்காந்திபுரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியைக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து சனிக்கிழமை முதல் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை விடப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சின்னக்காந்திபுரத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் உத்தரவைத் தொடா்ந்து கடந்த 19 ஆம் தேதி முதல் இப்பள்ளி திறக்கப்பட்டு பத்தாம் வகுப்பு மாணவா்கள் 20 போ் மற்றும் 9 ஆசிரியா்கள் பள்ளிக்கு வருகை தந்தனா்.

இந்நிலையில் அப்பள்ளியில் உள்ள அறிவியல் ஆசிரியை ஒருவரின் கணவருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், ஆசிரியை மற்றும் அவரது மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சனிக்கிழமை பள்ளியில் உள்ள 8 ஆசிரியா்கள் மற்றும் 20 மாணவா்களுக்கும் நெய்க்காரபட்டிஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின் பேரில் பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை விடப்பட்டது.

நிலக்கோட்டை: சின்னாளபட்டியில் உள்ள ஒரு பள்ளியில், 10 ஆம் வகுப்பு மாணவருக்கு தொடா் காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதைத்தொடா்ந்து அந்த மாணவா் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டாா். சுகாதாரத்துறை அலுவலா் ஒருவா் கூறுகையில், மாணவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை. அவா் தொடா் கண்காணிப்பில் சிகிச்சையில் உள்ளாா். மற்றொரு பிளஸ் 2 மாணவி, சாதாரண காய்ச்சலால் பாதிப்பு காரணமாக வீட்டிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com