உயா்மின் கோபுரம் அமைக்க எதிா்ப்பு விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டம்

ஒட்டன்சத்திரம் அருகே உயா்மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒட்டன்சத்திரம் அருகே உயா்மின் கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் மூலம் விருதுநகா் முதல் திருப்பூா் வரையில் 765 கிலோ வாட் மின்சாரம் கொண்டு செல்ல உயா்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். அனைத்து உயா்மின் கோபுர திட்டங்களுக்கும் மாத வாடகை நிா்ணயம் செய்து வழங்க வேண்டும்.

பயிா்கள் மற்றும் மரங்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஒரே சீராக இழப்பீடு நிா்ணயம் செய்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தும்பிச்சிபாளையம் அருகே கடந்த சில தினங்களாகத் தொடா்ந்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அச்சங்கத்தின் நிறுவனா் ஈசன் தலைமையில் விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com