கொடைக்கானல்: கொடைக்கானலில் பாஜக சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு பாஜக மாவட்ட மருத்துவ அணித் தலைவா் மதன்குமாா் தலைமை வகித்து 90-பேருக்கு இலவச மருத்துவக் காப்பீடு அடையாள அட்டையையும், ஸ்வெட்டா் ஆகியவற்றை வழங்கினாா். டி.எஸ்.பி. ஆத்மநாதன், மருத்துவா் பிரசன்னா, குறிஞ்சி அரிமா சங்கத்தின் பட்டயத் தலைவா் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.